கம்போங் பாண்டான்பள்ளிவாசலின் கல்வி-சமூகப் பணிகள் பாராட்டுக்குரியது!

கோலாலம்பூர், மார்ச் 12-
கம்போங் பாண்டான் பள்ளிவாசல் நிர்வாகத்தினர் ஆற்றி வருகின்ற கல்வி சமூக பணிகள் மிகவும் போற்றுதலுக்குரிய என என்று டத்தோ வீரா சாகுல் பாராட்டினார்

பள்ளிவாசல்கள் வழிபாட்டு தலங்களாக மட்டும் இல்லாமல் சமூக மாற்றத்தை ஏற்படுத்தும் பயிற்சி மையங்களாகவும் விளங்க வேண்டும் என்பதற்கேற்ப இந்தப் பள்ளிவாசல் செயல்படுகிறது என்று நேற்று முக்மின் அமைப்பின் தலைவர் டத்தோ வீரா சாகுல் அமிட் கூறினார்.

ஞாயிறுதோறும் தமிழ் வகுப்பு, மறைக்கல்வியான அல் குரான் ஓதுதல் என்றெல்லாம்
தொடர்ந்து வழங்கப்படும் பயிற்சிகள் வாழ்க்கையில் முன்னேற்றம் பெற உதவும் என்றார்.

இளைஞர்களுக்கு செயற்கை நுண்ணறிவு (AI) தொடர்பான பயிற்சிகளும், பெண்களுக்கு தையல் பயிற்சி போன்ற திறன் மேம்பாட்டு பயிற்சிகளும் வழங்கப்பட வேண்டும் என்று அவர் நேற்று கம்போங் பண்டான் பள்ளிவாசலில் நடைப்பெற்ற நோன்பு துறப்பு நிகழ்ச்சிக்கு பிறகு செய்தியாளர்களிடம் கூறினார்.

இந்த நோன்பு துறப்பு நிகழ்ச்சியில் மட்டும் சுமார் 450 பேர் கலந்து கொண்டு நோன்பு துறந்தனர்.

முக்மின் அமைப்பின் ஏற்பாட்டில் நாடு தழுவிய அளவில் ஏறக்குறைய 3,500 குடும்பங்களுக்கு நோன்புப் பெருநாள் உணவுப் பண்டங்கள் வழங்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

இந்தக் கம்போங் பண்டான் பள்ளிவாசலுக்கு தனி சிறப்பு இருப்பதாகவும், இங்கு தினமும் சுமார் 1,000 பேருக்கு உணவு வழங்கப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

1989-ஆம் ஆண்டிலிருந்து செயல்படும் இந்த பள்ளிவாசல் இஸ்லாம் சமயத்தினருக்கு மட்டும் அல்லாமல் சுற்று வட்டாரத்தை சேர்ந்து அனைத்து மக்களுக்குமான ஒரு சமூக உதவி மையமாகவும் விளங்குவது பாராட்டிற்குரியது.

டத்தோ மீரா நைனா முகம்மது, டத்தோ மாலிக் சார்பில் அவரின் பிரதிநிதி, ‘கே. என். கே. வி.’ குழுமத்தின் ஹாஜி ஹயாம் ரிப்பேர் உள்ளிட்ட சிறப்பு பிரமுகர்களும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles