நமது நகரத்தார் பழக்க வழக்கங்களுக்கான வழிமுறைகள் நூல் வெளியீட்டு விழா விமரிசையாக நடைபெற்றது!

கோலாலம்பூர் மார்ச் 30-
திருமதி காசி ஸ்ரீ V.PL.M. வசந்தாள் சுந்தரம் ஆச்சி அவர்கள் எழுதிய ‘நமது நகரத்தார் பழக்க வழக்கங்களுக்கான வழிமுறைகள்’ என்ற புத்தக வெளியீட்டு விழா நேற்று கோலாலம்பூர் லேக் கிளப் ஹவுஸில் மிகவும் விமரிசையாக நடைபெற்றது.

நாட்டில் புகழ்பெற்ற சைபர் ஜெயா யூனிவர்சிட்டியின் இணை வேந்தர் பேராசிரியர் டான்ஶ்ரீ பாலன், தொழில் முனைவோர் டத்தோ காசி, மலேசிய நகரத்தார் வர்த்தக சங்கத்தின் தலைவர் டத்தோ ஆர். இராமநாதன், தேசிய இருதய கழகத்தின் நிபுணர் டாக்டர் கணபதி, தண்ணீர் மலை செட்டியார், குமரன் ஆகியோர் இந்த நூல் வெளியீட்டு விழாவில் கலந்து சிறப்பித்தனர்.

மேலும் நகரத்தார் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் பெரும் அளவில் இந்த புத்தக வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டு ஆதரவு வழங்கியது பெரும் மகிழ்ச்சியை அளிக்கிறது.

இந்நூல் சிவகங்கைச் சீமையில் வாழும் நாட்டுக்கோட்டை செட்டியார் சமூகத்தில் கடைப்பிடித்து வரும் சடங்கு சம்பிரதாயம் முறையினை பிறப்பு முதல் இறப்பு வரை செய்யுமாறும் தொகுத்து அதற்கு ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பு தந்த முதல் நூலாகும்.

மேலும் ஒவ்வொரு நகரத்தார் வீட்டிலும் இருக்க வேண்டிய நூல் என்பது குறிப்பிடத்தக்கது.

இதைத் தொகுத்து வழங்கியோர் வள்ளல் தன்மை உடைய கண்டனூர் சேர்ந்த காசி ஸ்ரீ V.P.L.M. வசந்தாள் ஆச்சி அவர்கள் ஆவார் .

இதற்கு ஆங்கிலத்தில் வடிவம் கொடுத்து ஆராய்ச்சியாளர் (சுண்முகநாதபுரம் – 630 314) ஆங்கிலக் கவியரசு RM. சண்முகம் செட்டியார் அவர்கள் ஆவார்.

236 பக்கங்கள் கொண்ட இந்த நூல் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் உள்ளது.

நகரத்தார் நகரச் சிவன் கோவில்கள், நகரத்தார் திருமண நிகழ்ச்சிகள், சடங்குகள், கோவிலில் பாக்கு வைத்தல் திருமணத்தை கோவிலில் பதிவு செய்தல், திருவிளக்கேற்றுதல், நகை போடுதல், திருமாங்கல்யம் ஆசி பெறுதல், மொய்ப் பணம் எழுதுதல், சீராட்டுக் கொடுத்தல், மஞ்சள் நீராடுதல், சடங்கு தட்டு, முடி இறக்குவது, பேர் வைப்பது, தொட்டியில் கட்டுவது போன்றவை உட்பட பல செய்திகளை இளம் தலைமுறை நகரத்தார் தெரிந்து கொள்ளும் வகையில் நூல் ஆசிரியர் மிக அற்புதமாக தமது படைப்புகளை படைத்துள்ளார்.

நூல் ஆசிரியர் காசி ஸ்ரீ வசந்தாள் சுந்தரம் ஆச்சி அவர்களின் கடுமையான உழைப்பின் மூலம் இந்த புத்தகம் உருவாகி இருப்பது மிகவும் பாராட்டுக்குரியது.

இந்த நூல் வெளியீட்டு விழா சிறப்பாக நடைபெற ஆதரவு வழங்கிய அனைவருக்கும் காசி ஸ்ரீ வசந்தாள் சுந்தரம் ஆச்சி அவர்களின் புதல்வர் சண்முகம் அவர்கள் நன்றியை தெரிவித்துக் கொண்டார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles