


பிறை, ஏப் 6-
பினாங்கு மாநிலத்தில் பிறை MPKK மற்றும் அதன் தலைவர் ஸ்ரீசங்கர் ஆகியோர் ‘கல்வி ஊக்கம் மற்றும் உயர்கல்வி விருப்பங்கள்’ என்ற திட்டத்தை வெற்றிகரமாக ஏற்பாடு செய்திருந்தனர்
இத்திட்டத்தில், 200 இளைஞர்கள், குறிப்பாக SPM மாணவர்கள் தங்களின் கல்வி மற்றும் தொழில் பாதைகளைத் திட்டமிடுவதற்குப் பயனளித்தது.
இந்த ஒரு நாள் நிகழ்ச்சியில், கல்வி ஊக்கமூட்டும் உரைகள், உயர்கல்வி நிறுவனங்களில் தங்கள் படிப்பைத் தொடர்வதற்கான வாய்ப்புகளைப் பகிர்ந்துகொள்ளுதல், அத்துடன் கோலாலம்பூரிலிருந்து வந்திருந்த சிறப்பு விருந்தினர்களான டாக்டர் புனிதன் மற்றும் டாக்டர் சஞ்சய் ஆகியோருடனான கலந்துரையாடல் அமர்வுகள் இடம்பெற்றன.
அவர்களின் பகிர்வுகள், இன்றைய கல்வி உலகில் உள்ள சவால்கள் மற்றும் வாய்ப்புகள் குறித்து பங்கேற்பாளர்களுக்குத் தெளிவான மற்றும் நடைமுறை சார்ந்த புரிதலை வழங்கின.
தொடக்க விழாவை, பினாங்கு வீட்டுவசதி மற்றும் சுற்றுச்சூழல் ஆட்சிக் குழு உறுப்பினர் மாண்புமிகு டத்தோஸ்ரீ சுந்தரஜூ அவர்கள் அதிகாரப்பூர்வமாக தொடக்கி வைத்தார்.
இளைஞர் மேம்பாட்டு முயற்சிகளுக்குத் தனது ஆதரவையும், எதிர்காலத்தின் அடித்தளமாகக் கல்வி விளங்குவதன் முக்கியத்துவத்தையும் அவர் வெளிப்படுத்தி பேசினார்.
இந்த நிகழ்ச்சி, ‘டேர் டு கேர் அசோசியேஷன்’ மற்றும் பிறை சட்டமன்ற மக்கள் சேவை மையம் ஆகியவற்றின் ஒத்துழைப்போடு சீராக நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சி பிறை எம்பிபிகே உறுப்பினர்களின் வலுவான அர்ப்பணிப்பையும் பெற்றது.
மேலும் இந்த நிகழ்ச்சி வெற்றி பெற APPGMSDG மற்றும் Yayasan Hasanah முழு ஆதரவு வழங்கியது என்பது குறிப்பிடத்தக்கது.
மொத்தத்தில், இந்த நிகழ்ச்சி இளைஞர்களுக்கு உத்வேகம் அளித்தல், விழிப்புணர்வை ஏற்படுத்துதல் மற்றும் தெளிவான, மேலும் கவனம் குவிக்கப்பட்ட கல்வித் திட்டங்களை வகுக்க உதவுதல் ஆகிய தனது நோக்கங்களை வெற்றிகரமாக அடைந்தது என்று ஸ்ரீ சங்கர் தெரிவித்தார்

