
நாட்டில் மிகவும் பழமை வாய்ந்த கோவில்களில் ஒன்றாக தாமான் துன் டாக்டர் இஸ்மாயிலில் உள்ள புக்கிட் கியாரா ரூமா பாஞ்சாங் ஸ்ரீ மகா மாரியம்மன் கோவில் விளங்குகிறது.

புக்கிட் கியாரா ரூமா பாஞ்சாங் மக்களுக்கு அருள் பாலித்து கொண்டிருக்கும் இந்த கோவிலின் 55 ஆம் ஆண்டு சித்திரை திருவிழா வரும் மே 2 ஆம் தேதி மிகப்பெரிய அளவில் நடைபெறுகிறது.
சித்திரை திருவிழாவை முன்னிட்டு ஏப்ரல் 24 ஆம் தேதி முதல் மே 5 ஆம் தேதி வரை பத்து தினங்களுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகின்றன.
அந்த வகையில் ஏப்ரல் 25 ஆம் தேதி இரண்டாம் நாள் உபயம் மண்ணின் மைந்தர் யாங் பெர்பஹியா டாக்டர் மனோ பரமசிவம் குடும்பத்தின் சார்பில் மிகவும் விமரிசையாக நடைபெற்றது.
தனது தந்தை பரமசிவம் – தாயார் பாலம்மாள் நினைவாக ஒவ்வொரு ஆண்டும் இந்த சிறப்பு பூஜையை யாங் பெர்பஹியா டாக்டர் மனோ பரமசிவம் ஏற்று நடத்தி வருகிறார்.

காலை பத்து மணிக்கு மேல் விக்னேஸ்வர பூஜை நடைபெற்றது.
.மாலை 6.00 மணிக்கு மேல் நித்திய பூசை, ஆலய வசந்த மண்டப பூஜைகளுடன் அம்பாள் ஆலய பிரகார வருதல் இடம் பெற்றது. தீபாரனையைத் தொடர்ந்து பக்தர்களுக்கு சுவையான அன்னதானமும் பரிமாறப்பட்டது.

யாங் பெர்பஹியா டாக்டர் மனோ பரமசிவம் அவர்களின் சகோதரர்கள், சகோதரிகள், உற்றார் உறவினர்கள், குடும்ப நண்பர்கள் உட்பட பொது மக்களும் கலந்து சிறப்பித்தனர்.
ஸ்ரீ மகா மாரியம்மன் கோவில் தேவஸ்தானத்தின் அறங்காவலர் சந்திரசேகரன், மலேசிய தமிழ் பத்திரிகையாளர் சங்கத்தின் தலைவர் முத்தமிழ் மன்னன், டாக்டர் மகேந்திரன், பெரியவர் மாலை முணி ஆகியோருக்கு சிறப்பு செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

