கட்டுக் கதைகளை நம்பாதீர்கள்! 2008 இல் விலை போகாத அரசியல்வாதி நான்! மனித வள அமைச்சர் சிவகுமார் பதிலடி

2008 இல் பேராக் மாநில சட்டமன்ற சபாநாயகராக இருந்தபோது எனக்கு மிகப்பெரிய தொகை விலை பேசப்பட்டது.

பேராக் மாநிலத்தில் அரசியல் நெருக்கடி ஏற்பட்டபோது இந்த மிகப்பெரிய தொகையை கொடுக்க முன் வந்தார்கள்.

அன்று நான் விலை போகவில்லை. இப்போதும் விலை போகமாட்டேன்.

அறையில் கூட்டம் போட்டு மில்லியன் கணக்கில் பணத்தை வாங்கி கொண்டிருக்கிறேன் என்று சமூக வலைத்தளங்களில் வதந்திகளை பரப்பி வருகின்றனர்.

இந்த கட்டுக் கதைகளை யாரும் நம்ப வேண்டாம். நான் அரசியலில் எப்போதும் நேர்மையாக இருக்க விரும்புகிறேன்.

மனித வள அமைச்சர் என்ற முறையில் இந்திய சமுதாயத்திற்கு சிறந்த முறையில் சேவையாற்ற கால அவகாசம் தேவைபடுகிறது.

டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தலைமையிலான இந்த அரசாங்கம் படிப்படியாக இந்திய சமுதாயத்தின் தேவைகளை பூர்த்தி செய்யும் என்று மலாயா பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற ஒளவையார் மாநாட்டை தொடக்கி வைத்தபோது அவர் இவ்வாறு தெரிவித்தார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles