
சொக்சோ இழப்பீட்டு விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படுவதால் சந்தாதாரர்கள் பெரும் மன உளைச்சலுக்கு ஆளாகி வருகின்றனர்.
இந்த சம்பவத்தை மனித வள அமைச்சு கண்டிப்பாக ஆராயும் என்று மனித வள அமைச்சர் வ சிவகுமார் தெரிவித்தார்.
சொக்சோ இழப்பீட்டு விண்ணப்பங்கள் நிராகரிக்காமல் இருக்க அதன் நடைமுறைகள் ஆராயப்படும்
ஒருவர் வேலை செய்யும் காலகட்டத்தில் சொக்சோ சந்தாவை முறையாக செலுத்தி வருகிறார்.
ஆனால், அவசிய நேரத்தில் அந்த சொக்சோவின் வாயிலாக இழப்பீடுகளைப் பெற விண்ணப்பங்கள் செய்யும்போது அது நிராகரிக்கப்படுவதால் அவர்கள் மன உளைச்சலுக்கும் வேதனைக்கும் ஆளாகி வருகின்றனர்.
சொக்சோ இழப்பீட்டை பெறுவதற்கு சந்தாதாரர்கள் அலுவலகங்களை ஏறி இறங்கி கடைசியில் இழப்பீடு கிடைக்காமல் போனால் பெரும் துயரத்திற்கு ஆளாகி விடுகின்றனர்.
இது போன்ற சம்பவங்கள் இனியும் நிகழாமல் இருக்க இழப்பீடு விண்ணப்பங்கள் நிராகரிக்காமல் இருக்கும் நடைமுறைகளை மனித வள அமைச்சு ஆராயும்.
இதனிடையே சொக்சோவின் சமூக நல பாதுகாப்பு திட்டத்தில் பங்கேற்று நன்மை அடையும் வகையில் இல்லத்தரசிகள் விரைந்து பதிந்து கொள்ளும்படி அவர் கேட்டுக் கொண்டார்.
மலாயா பல்கலைக்கழகத்தில் வேந்தர் அரங்கில் நடைபெற்ற முதலாவது அனைத்துலக ஒளவையார் மாநாட்டை தொடக்கி வைத்தபோது ஒளவையாருக்கு உலக அரங்கில் பெருமை சேர்ந்த நாடாக மலேசிய விளங்குகிறது என்று அவர் சொன்னார்.

