
பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்த 2023 பட்ஜெட்டில் மனித வள அமைச்சுக்கு 1.4 பில்லியன் தொகையை ஒதுக்கி உள்ளார்.
மனித வள அமைச்சு மற்றும் சொக்சோ நிறுவனத்தின்
(SOCSO) இன் கீழ் திட்டங்களை செயல்படுத்த இந்த தொகை ஒதுக்கப்பட்டுள்ளது.
2023 பட்ஜெட்டில் கோடிட்டுக் காட்டப்பட்டுள்ள பரிந்துரைகளுக்கு ஏற்ப மனித வள அமைச்சு
வேலையில்லா திண்டாட்டத்தை குறைப்பதில் கவனம் செலுத்தும் என்று அமைச்சர் வ சிவகுமார் தெரிவித்தார்.
குறிப்பாக பெண்கள் மற்றும் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகளை ஏற்படுத்தித் தரும் வகையில் மனித அமைச்சு , சொக்சோ நிறுவனத்தின் மூலம் வேலை வாய்ப்பு கண்காட்சிகளை மிகப்பெரிய அளவில் நடத்தி கொண்டிருக்கிறது.
TVET தொழில் திறன் பயிற்சி மூலம் ஆயிரக்கணக்கான தொழிலாளர்களை மையமாக வைத்து தொழில் திறன் பயிற்சியும் வழங்கப்படுகிறது.
மனித வள அமைச்சின் கீழ் நடத்தப்படும் வேலை வாய்ப்பு கண்காட்சியில் அதிகமாக மக்கள் பங்கெடுத்து தங்களுக்கு பொருத்தமான வேலைகளை தேர்வு செய்து கொள்ளும்படி பத்து காஜாவில் வேலை வாய்ப்பு கண்காட்சியை தொடக்கி வைத்தபோது அவர் இதனை வலியுறுத்தினார்.
உட்புறங்களில் வாழும் மக்களுக்கும் வேலைகள் கிடைக்க நாடு தழுவிய அளவில் வேலை வாய்ப்பு கண்காட்சிகள் தொடர்ந்து நடத்தப்படும் என்று அவர் சொன்னார்.

