

பேராக் மாநில விளையாட்டு மன்றத்தின் ஏற்பாட்டில் கடந்த வார இறுதியில் ஈப்போவில் தற்காப்புக் கலை விளையாட்டுப் போட்டிகள் மிகவும் விமரிசையாக நடைபெற்றன.
தெக்வாண்டோ, கராத்தே, சீலாட், சிலம்பம் உட்பட அனைத்து விளையாட்டு போட்டிகளும் இடம்பெற்ற வேளையில் கராத்தே போட்டியை மாஸ்டர் அனந்தன் தலைமையில் நடைபெற்றது.
மனித வள அமைச்சர் வ சிவகுமார் சிறப்பு வருகை புரிந்து போட்டியை தொடக்கி வைத்தார்.
தற்காப்புக் கலை போட்டியில் ஏராளமான இளைஞர்கள் கலந்து கொண்டது மிகவும் பாராட்டுக்குரியது என்று அமைச்சர் சிவக்குமார் தெரிவித்தார்.
இதனிடையே
வரும் மே மாதத்தில் பேராக் மாநிலத்தில் அனைத்துலக கராத்தே மிகப்பெரிய அளவில் நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது

