

ரவாங் மாற்றுத் திறனாளிகள் தன்னிலை பயிற்சி மையத்தில் தங்கியுள்ள மாற்றுத் திறனாளிகள் பயன் படுத்தி வரும் வேனில் லிஃப்ட் பொருத்துவதற்கு மனித வள அமைச்சர் வி. சிவகுமார் 20,000 வெள்ளியை வழங்கி பேருதவி புரிந்துள்ளார்.
மாற்றுத் திறனாளிகளான பயன்படுத்துவதற்கு மலேசியா வழக்கறிஞர்கள் மன்றம் புதிய வேனை வாங்கிக் கொடுத்துள்ளது.
இந்த வேனில் மாற்று திறனாளிகள் சக்கர நாற்காலியுடன் ஏறி அமர்வதற்கு லிஃப்ட் பொருத்த வேண்டும்.
இதற்கு 20,000 வெள்ளி தேவைப்படுவதாக
ரவாங் மாற்றுத் திறனாளிகள் தன்னிலை பயிற்சி மையத்தின் தலைவர் பிரான்ஸ் சிவா கடந்த மாதம் மனித வள அமைச்சர் சிவகுமாரை சந்தித்து உதவியை நாடினார்.
மாற்று திறனாளிகளின் விண்ணப்பத்தை உடனடியாக அங்கீகரித்த மனித வள அமைச்சர் வ சிவகுமார் இன்று 20,000 வெள்ளிக்கான காசோலையை நேரடியாக வழங்கினார்.
நேற்று ரவாங்கில் உள்ள மாற்று திறனாளிகள் தன்னிலை பயிற்சி மையத்திற்கு நேரடி வருகை புரிந்த அவர், அங்கு தங்கியுள்ளவர்களிடம் உரையாடி மகிழ்ந்தார்.
இதனிடையே தக்க நேரத்தில் தங்களுக்கு உதவிக் கரம் நீட்டிய மனித வள அமைச்சர் சிவகுமாருக்கு ரவாங் மாற்று திறனாளிகள் தன்னிலை பயிற்சி மையத்தின் தலைவர் பிரான்ஸ் சிவா நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.

