
கோலாலம்பூர்: மே 28-
தைப்பிங் சிறைக் கலவரம் குறித்த சுஹாகாம் அறிக்கையை அரசு பரிசீலிக்கும் என்று
தகவல் தொடர்பு அமைச்சர் ஃபஹ்மி ஃபட்சில் தெரிவித்தார்.
தைப்பிங் சிறையில் கைதி ஒருவர் உயிரிழந்த கலவரம் தொடர்பாக மனித உரிமைகள் ஆணையம் நடத்திய பொது விசாரணையின் முடிவுகளை, அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து முடிவெடுப்பதற்கு முன்பு அரசாங்கம் ஆய்வு செய்யும்.
இந்த விவகாரம் அமைச்சரவையில் விவாதிக்கப்படவில்லை.
ஆனால் சுஹாகாமின் கண்டுபிடிப்புகளை புத்ராஜெயா தீவிரமாக எடுத்துக் கொள்கிறது.
வழக்கமாக, சுஹாகாமின் ஆண்டு அறிக்கை விவாதத்திற்காக நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும், நாங்கள் அதை ஆய்வு செய்வோம்.
சுஹாகாமின் கண்டுபிடிப்புகளை நாங்கள் தீவிரமாக எடுத்துக்கொள்கிறோம்.
எந்தவொரு நடவடிக்கையும் எடுப்பதற்கு முன்பு இந்த விஷயத்தை நாங்கள் ஆராய்வோம், என்று லெம்பா பந்தாய் தியாகப் பெருநாள் விழாவிற்குப் பிறகு அவர் இதனைத் தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

