


காளிதாஸ் சுப்ரமணியம்
கிள்ளான், மே 28-
மலேசிய சிலம்ப கழகத்தின் தேசிய பேராளர் மாநாடு நேற்று கிள்ளான் செந்தோசாவில் மிகவும் பரபரப்பான சூழலில் நடைபெற்றது.
16 மாநிலங்களில் இருந்து 80 பேராளர்கள் கலந்து சிறப்பித்தனர்.
இம்முறை தேர்தல் ஆண்டு என்பதால் ஆண்டு பொதுக்கூட்டம் பரபரப்பாக காணப்பட்டது. இரண்டு அணிகள் களம் கண்டன.
நடப்பு தலைவர் டாக்டர் எம்.சுரேஸ் மீண்டும் தலைவர் பதவியை தற்காத்துக் கொள்ள போட்டியிட்டார்.
இவருக்கு 43 வாக்குகள் கிடைத்த வேளையில் எதிர்த்து போட்டியிட்ட ஜொகூர் மாநிலத்தைச் சேர்ந்த சிவன் கிருஷ்ணனுக்கு 37 வாக்குகள் கிடைத்தன.
துணை தலைவர் பதவிக்கு விலாயா மாநில சிலம்ப கழகத்தின் தலைவர் டாக்டர் ஆர்.டி. உதயகுமார் போட்டியிட்டார். அவருக்கு 43 வாக்குகள் கிடைத்தன.
எதிர்த்து போட்டியிட்ட ரகுபதிக்கு 37 வாக்குகள் கிடைத்தன.
கடந்த தேர்தலில் துணை தலைவர் பதவிக்கு போட்டியிட்டு தோல்வி கண்ட டாக்டர் ஆர்.டி. உதயகுமார் இம்முறை வெற்றி பெற்று பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறார்.
நான்கு உதவித் தலைவர்கள் பதவிக்கு மொத்தம் எட்டு பேர் போட்டியிட்டனர்.
இதில்
Thanabalan – 42 votes ( Kedah )
R.Supramaniam – 41 votes ( NS )
K.Kamalanathan – 46 votes ( WP Putrajaya )
N.Vijaya Segaran – 48 votes ( Selangor ) வெற்றி பெற்றனர்.
9 உச்சமன்ற உறுப்பினர்கள் தேர்தலில்
G.Thiagarajan- 43 votes ( WPKL )
G Kamini – 43 votes ( Melaka)
M.Loganathan- 43 votes ( WPKL )
V.Arunishrao – 41 votes ( Johore )
D.Vasantha Kumar – 42 votes ( Kedah )
E.Tilagarajan – 42 votes ( Selangor )
R.Jegan – 79 votes ( NS )
S.Vicknesswari – 49 votes ( Sarawak )
S.Vejiyethran – 42 votes ( Penang
ஆகியோர் வெற்றி பெற்றனர்.
இரு அணிகள் சார்பில் வேட்பாளர்கள் சமமாக வெற்றி பெற்று இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

