


ஊத்தாங் மெலிந்தாங், ஜூன் 1-
மலேசிய இந்தியர்களின் தாய்க்கட்சியாக விளங்கும் மஇகா தற்போது 80 ஆம் ஆண்டில் கால் பதிக்கிறது.
இந்த 80 ஆம் ஆண்டு கொண்டாட்டம் நாடு தழுவிய அளவில் ம இகாவினர் உற்சாகத்துடன் கொண்டாடி வருகின்றனர்.
அந்த வகையில் பேராக் மாநிலத்தில் மிகவும் புகழ்பெற்ற பாகான் டத்தோ தொகுதி ம இகா வின் 80ஆம் ஆண்டு நிறைவை முன்னிட்டு குடும்ப தின விழா நேற்று மிகப்பெரிய அளவில் நடைபெற்றது
சன்மார்க்கா மண்டபம், சிம்பாங் அம்பாட், ஊத்தான் மெலிந்தாங், பேராக்கில் நடைபெற்ற இந்த விழாவில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் கலந்து கொண்டனர்
இந்நிகழ்ச்சி, பல்வேறு சுவாரஸ்யமான நிகழ்ச்சிகள் மற்றும் குடும்பத்தினருக்கான செயல்பாடுகள் மூலம் உள்ளூர் மக்களை ஒருங்கிணைத்து, ஒற்றுமை மற்றும் குடும்பப் பிணைப்பை வலுப்படுத்தும் நோக்கத்துடன் நடைபெற்றது..
சமூக நலன் மற்றும் கல்வி மேம்பாட்டில் கட்சியின் அர்ப்பணிப்பை வெளிப்படுத்தும் வகையில் மாணவர்களுக்கு பல உதவிகள் வழங்கப்பட்டன.
பாகான் டத்தோ மாவட்டத்தைச் சேர்ந்த 2025 ஆம் ஆண்டு எஸ்.பி.எம். தேர்வில் சிறந்து விளங்கிய 10 இந்திய மாணவர்களுக்கு மடிக்கணினியும் வழங்கப்பட்டது.
மாற்றுத் திறனாளிகளான 10 இந்திய நோயாளிகளுக்கு சக்கர நாற்காலிகள் மற்றும்
பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கிய பாகான் டத்தோ மாவட்ட தமிழ் பள்ளி மாணவர்கள் 10 பேருக்கு தலா ரிம 500 சிறப்பு நிதியுதவி வழங்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சி, சமூக ஒற்றுமையை மேலும் வலுப்படுத்துவதோடு, உதவி தேவைப்படும் மக்களையும், தங்கள் சாதனைகளால் மாவட்டத்திற்கு பெருமை சேர்த்த மாணவர்களையும் கௌரவிக்கும் ஒரு சிறந்த தளமாக அமைந்துள்ளது என்று பாகான் டத்தோ தொகுதி இளைஞர் தலைவர் மற்றும் துணைப் பிரதமரின் சிறப்பு அதிகாரியுமான
அர்விந்த் அப்பளசாமி தெரிவித்தார்.
திரு. அர்விந்த் அப்பளசாமி

