


ஊத்தாங் மெலிந்தாங், ஜூன் 1-
பாகான் டத்தோ ம இகா தொகுதி காங்கிரஸ் ஏற்பாட்டில் நேற்று ஊத்தாங் மெலிந்தாங் சன்மார்க்க மண்டபத்தில் மிகப்பெரிய அளவில் குடும்ப தின விழா விமரிசையாக நடைபெற்றது.
பாகான் டத்தோ தொகுதி இளைஞர் அணி தலைவர் மற்றும் துணை பிரதமரின் சிறப்பு அதிகாரி அர்விந்த் அப்பளசாமி ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த விழாவில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் கலந்து கொண்டனர்.
நாடாறிந்த ரோக் சம்பா புகழ் டார்கி பாடல்களை பாடி அனைவரையும் பரவசத்தில் ஆழ்த்தினார்.
இந்த குடும்ப தின விழாவில் கல்வியில் சிறந்து விளங்கும் பத்து மாணவர்கள் தலா 500 வெள்ளி வெகுவாக வழங்கப்பட்டது.
மேலும் உடல் நலம் பாதிக்கப்பட்ட பத்து பேருக்கு சக்கர நாற்காலிகள் வழங்கப்பட்டது.
பாகான் டத்தோ தொகுதியில் குறிப்பாக ஊத்தாங் மெலிந்தாங் இந்தியர்களுக்கு அர்விந்த் அப்பளசாமி சிறந்த முறையில் சேவையாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

