மக்களின் நலத் திட்டங்களுக்கு முன்னுரிமை அளிக்கும் வகையில் பக்கத்தான் ஹராப்பான் தேர்தல் கொள்கை அறிக்கை வெளியீடு!

சிரம்பான் ஜூலை 21-
மக்கள் நலத் திட்டத்தை வலுப்படுத்துதல், போட்டித்தன்மை வாய்ந்த பொருளாதாரத்தை உருவாக்குதல், 30,000 அதிக ஊதிய வேலை வாய்ப்புகளை உருவாக்குதல், அனைவருக்கும் தரமான கல்வி, அத்துடன் 20,000 மலிவு விலை வீடுகளைக் கட்டுதல், நிலப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணுதல் ஆகியவை உள்ளடக்கிய பக்கத்தான் ஹராப்பான் தேர்தல் கொள்கை அறிக்கை நேற்று வெளியிடப்பட்டது.

இதில் இளைஞர்கள், பெண்கள், குடும்பங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது.

சுற்றுலா மேம்பாடு மற்றும் பாரம்பரியப் பெருமை, சமச்சீரான நகர்ப்புற, கிராமப்புற மேம்பாடு, ஃபெல்டா, நவீன வேளாண்மை, உணவுப் பாதுகாப்பு; உள்கட்டமைப்பு, தரமான சுகாதார சேவைகள், அத்துடன் அனைவருக்கும் மத ஒற்றுமை, நல்லிணக்கம், முன்னேற்றம் ஆகியவையும் இதில் அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

நெகிரி செம்பிலான் மாநில சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு பக்கத்தான் ஹராப்பான் தேர்தல் கொள்கை அறிக்கையை டத்தோஸ்ரீ அமினுடின் நேற்று வெளியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles