விபத்தில் சிக்கி கோமாவில் இருக்கும்
உணவு விநியோகிப்பாளருக்கு
7,000 வெள்ளி சொக்சோ உதவித் தொகை

விபத்தில் சிக்கி சுங்கை பூலோ மருத்துவமனையில் கோமாவுக்கு தள்ளப்பட்ட உணவு விநியோகிப்பாளரின் (ரைடர்) குடும்பத்திற்கு சொக்சோ உதவி தொகையாக 7,000 வெள்ளி வழங்கப்பட்டது.

34 வயதான முகமட் ஹபிஸ் இட்ரிஸ் உணவு விநியோகிப்பாளராக பணிபுரிந்து வந்துள்ளார்.

இவர் கடந்த ஆகஸ்ட் மாதம் உணவு கொண்டு செல்லும் போது நிகழ்ந்த விபத்தில் அவர் கடுமையான காயங்களுக்கு இலக்கானார்.

தற்போது கோமா நிலையில் இருக்கும் அவர் சுங்கைபூலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்நிலையில் நேற்று மனிதவள அமைச்சர் வ.சிவக்குமார், பெர்கேசோ தலைமை செயல்முறை இயக்குநர் டத்தோஸ்ரீ அஸ்மான் உட்பட பெர்கேசோ அதிகாரிகள் சுங்கைபூலோ மருத்துவமனைக்கு விரைந்தனர்.

ஹபிஸின் மனைவியை சந்தித்து ஆறுதல் கூறிய அமைச்சர் சிவகுமார் அவருக்கான சொக்சோ உதவி தொகையை வழங்கினார்.

சுயதொழில் சமூக பாதுபாப்பு திட்டத்தின் வாயிலாக 7 ஆயிரம் வெள்ளி அவருக்கு வழங்கப்பட்டது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles