சமூக சேவையில் அர்ப்பணிக்கும் மலேசியா ஸ்ரீ குழந்தை வடிவேலன் திருப்பணி சபா

கடந்த 25 மற்றும் 26 ஆம் திகதி பிப்ரவரி மாதம் பேராக் கிந்தா சிட்டி ஏயோன் பேரங்காடியில் தங்களது 68ஆவது இரத்தத்தான முகாமை மலேசிய இரத்த வங்கி மற்றும் பேராக் ராஜ பெர்மாய்சூரி பைனுன் மருத்துவமனையோடு இணைந்து ஏற்பாடு செய்திருந்தனர்.

இரத்த பற்றாக்குறையினால் காஜாங்,சிலாங்கூர் மாநிலத்தைத் தவிர மற்ற மாநிலங்களிலும் இதைப்போன்ற இரத்தான முகாம்கள் ஏற்பாடு செய்ய எண்ணியதாக மலேசியா ஸ்ரீ குழந்தை வடிவேலன் திருப்பணி சபாவின் தேசியத்தலைவர் கலைமாமனி DR பிரேம கண்ணன் தெரிவித்தார்.

இம்முகாமில் 200க்கும் மேற்பட்ட மக்கள் கலந்துகொண்டதாக அவர் தெரிவித்தார்.

இரத்தப் பற்றாகுறையைக் கருத்தில் கொண்டு ஏற்பாடுசெய்யும் இரத்தத்தான முகாமில் அதிகமான பொதுமக்கள் கலந்துகொண்டு இரத்தத்தானம் செய்ய முன்வர வேண்டுமென்று அவர் கேட்டுக் கொண்டார்.

தாங்கள் ஏற்பாடு செய்த இரத்தத்தான முகாமிற்கு ஆதரவளித்த் பேராக் கிந்தா சிட்ட பேரங்காடி,அதன் நிர்வாகத்தினர் திருமதி லீசா,திரு ஐமான்,பேராக் ராஜ பெர்மாய்சூரி பைனுன் மருத்துவமனையைச் சேர்ந்த மருத்துவர்கள் Dr ஹஷிம் ,Dr ஹனிசா ,தாதிகளுக்கும்,ஆசிரியை திருமதி ஜெயந்திக்கும்,சேவையாளர்களுக்கும் மலேசியா ஸ்ரீ குழந்தை வடிவேலன் திருப்பணி சபாவின் நன்றிகளை கலைமாமனி DR பிரேம கண்ணன் தெரிவித்துக் கொண்டார்

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles