அந்நிய தொழிலாளர்கள் பிரச்சனைக்கு தீர்வு கண்டு வரும்
மனித வள அமைச்சருக்கு
மிம்தா பாராட்டு

நாட்டில் பல துறைகள் எதிர் நோக்கி இருக்கும் அந்நிய தொழிலாளர்கள் பிரச்சனைக்கு நல்ல முறையில் தீர்வு கண்டு வரும் மனித வள அமைச்சர் வ சிவகுமாருக்கு மிம்தா எனப்படும் மலேசிய இந்தியர் உலோக பொருள் மறுசுழற்சி சங்கத்தின் தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் பி கிருஷ்ணமூர்த்தி தெரிவித்தார்.

மனித வள அமைச்சர் வ சிவகுமார் மற்றும் உள்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ சைபுடின் நசுத்தியோன் ஆகியோர் குறுகிய காலத்திலேயே அந்நிய தொழிலாளர்கள் பிரச்சனைக்கு உடனடியாக தீர்வு கண்டிருக்கிறார்கள்.

அதேபோல் உலோக பொருள் மறுசுழற்சி துறையில் ஈடுபட்டிருக்கும் நாங்களும் அந்நிய தொழிலாளர்கள் பிரச்சனையை காலங்காலமாக எதிர் நோக்கி இருக்கிறோம்.

எங்களுக்கும் போதுமான அந்நிய தொழிலாளர்கள் கிடைப்பதற்கு மனித வள அமைச்சர் சிவகுமார் உதவ வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.

மரியாதை நிமித்தமாக மனித வள அமைச்சர் சிவகுமாரை மிம்தா தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் பி கிருஷ்ணமூர்த்தி, துணைத் தலைவர் டத்தோ எஸ்.எம். முத்து, செயலாளர் முத்தப்பன், ஆலோசகர் டத்தோஸ்ரீ தமிழ்ச் செல்வம் மற்றும் உச்சமன்ற உறுப்பினர் பன்னீர் செல்வம் ஆகியோர் நாடாளுமன்ற கட்டடத்தில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.

இந்திய தொழில் துறைகளில் நிலவி வரும் அந்நிய தொழிலாளர்கள் பிரச்சனைக்கு படிப்படியாக தீர்வு காணப்படும் என்று மனித வள அமைச்சர் சிவகுமார் தெரிவித்தார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles