
ஜொகூர் பாரு, ஜூன் 1-
16ஆவது மாநிலத் தேர்தலுக்கு வழி விடும் வகையில் ஜொகூர் மாநில சட்டமன்றம் இன்று கலைக்கப்படுகிறது.
ஜொகூர் மாநில இடைக்கால சுல்தான் துங்கு இஸ்மாயில் சுல்தான் இப்ராஹிமின் ஒப்புதலைப் பெற்ற பின்னர் மந்திரி புசார் ஓன் ஹபிஸ் காஸி இந்த அறிவிப்பை வெளியிட்டார்.
ஜொகூர் மக்களுக்கு ஒரு நிலையான, வலுவான அரசாங்கம் தொடர்ந்து கிடைப்பதை உறுதி செய்யும் நோக்கத்துடன் இந்த முடிவு எடுக்கப்பட்டது.
சட்டமன்றம் கலைக்கப்பட்டதைத் தொடர்ந்து அடுத்த 60 நாட்களுக்குள் தேர்தல் நடத்தப்பட வேண்டும் அவர் செய்தியாளர் சந்திப்பில் கூறினார்.
இதனிடையே இன்றைய அறிவிப்பு, பல வாரங்களாக நிலவி வந்த ஊகங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படுகிறது.
கடந்த 2022இல் ஜொகூர் மாநில நடந்த மாநிலத் தேர்தலில் 56 இடங்களில் 40 இடங்களை வென்று தேசிய முன்னணி மாநில அரசை அமைத்திருந்தது.
பக்கத்தான் ஹராப்பான் 2 இடங்களையும், பெரிக்கத்தான் நேஷனல் மூன்று இடங்களையும், மூடா ஒரு இடத்தையும் கைப்பற்றியது என்பது குறிப்பிடத்தக்கது.

