

மா.பவளம்
கோலாலம்பூர் ஜூன் 3-
நாட்டில் மிகவும் பிரபலமான
செந்தூல் தேவி ஸ்ரீ மகா காளியம்மன் கோவில் இப்போது பல லட்சம் வெள்ளி செலவில் கட்டப்பட்டு வருகிறது.
ஆடிமாதம் என்றாலே செந்தூல் காளியம்மன் கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது.
இன்று உலக மக்களின் கவனத்தை ஈர்த்த ஒரு மாபெரும் கோவிலாக செந்தூல் மகாராணி விளங்குகிறது.
இரண்டு ஆண்டுகளில் இந்த கோவில் பிரமாண்டமான முறையில் கட்டி முடிக்க கோவில் நிர்வாகம் ஏற்பாடுகளை முன் எடுத்துள்ளது மிகவும் பாராட்டுக்குரியது என்று இளம் தொழில் முனைவர் சி.ஆர். கார்த்திக் தெரிவித்தார்.
இந்த கோவில் கட்டுமான பணி வெற்றி பெற 0.2 கிராம் கொண்ட அம்மன் உருவம் பொறிக்கப்பட்ட தங்க காசு விற்பனை அறிமுகம் செய்யப்படுகிறது என்று அவர் சொன்னார்.
இந்த தங்க காசு விலை 501 வெள்ளி மட்டுமே.
மேலும் 70 கிராம் எடைக் கொண்ட சுத்த தங்கம் கொண்ட அம்மன் சிலை 60,000 வெள்ளியாகும்.
9 நாட்கள் பூஜையில் வைக்கப்படும் அம்மன் சிலையை 60,000 வெள்ளிக்கு மேல் கொடுத்து வாங்கும் உரிமையாளரிடம் முறையாக ஒப்படைக்கப்படும்.
தங்க காசு மற்றும் தங்க அம்மன் சிலை விற்பனை செய்யும் அங்கீகாரம் கோவில் நிர்வாகத்திடம் வழங்கப்படுகிறது.
மேலும் தங்க காசு விற்பனை நிதி அனைத்தும் கோவில் வங்கி கணக்கில் செலுத்தப்படும் என்று அவர் சொன்னார்
இதனிடையே
செந்தூல் காளியம்மன் கோவில் கருவறைகள் அனைத்தும் கருங்கற்களால் அமைக்கிறது என்று கவிமாறன் தெரிவித்தார்.
இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் சி.ஆர். கார்த்திக், கவிமாறன் மற்றும் கோவில் நிர்வாகத்தினர் கலந்து சிறப்பித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

