

கோலாலம்பூர் ஜூன் 4-
நாட்டில் மிகவும் பழமை வாய்ந்த சிலாங்கூர் – கோலாலம்பூர் இந்திய வர்த்தக சங்கத்தின் முக்கிய பதவிகளுக்கு கடும் போட்டி நிலவுகிறது.
98 ஆண்டுகள் வரலாறு கொண்ட சிலாங்கூர் – கோலாலம்பூர் இந்திய வர்த்தக சங்கத்தின் ஆண்டு கூட்டம் மற்றும் தேர்தல் வரும் ஜூன் 14 ஆம் தேதி தோட்ட மாளிகையில் நடைபெறுகிறது.
இம்முறை தேர்தல் ஆண்டு என்பதால் வி.கே.கே.இராஜசேகரன் மற்றும் பிரபாகரன் வைத்தியலிங்கம் அணிகள் போட்டியிடுகின்றன.
நடப்பு தலைவர் நிவாஷ் இராகவன் இரண்டு தவணைகள் தலைவராக இருந்ததால் அவர் மீண்டும் தலைவர் பதவிக்கு போட்டியிடவில்லை.
சிலாங்கூர் கோலாலம்பூர் இந்திய வர்த்தக சங்கத்தின் சட்ட விதிகளின் படி ஒருவர் இரண்டு தவனைகள் மட்டுமே தலைவராக இருக்க முடியும்.
அந்த வகையில் இம்முறை தலைவர் பதவிக்கு. வி.கே.கே இராஜசேகரன் மற்றும் பிரபாகரன் வைத்தியலிங்கம் போட்டியிடுகிறார்கள்.
வி கே கே இராஜசேகரன் அணியில்
துணை தலைவர் பதவிக்கு
பன்னீர் செல்வம்,
உதவித் தலைவர் பதவிக்கு
டாக்டர் சித்ரா மற்றும்
பொருளாளர் பதவிக்கு
ஐ.ஆர்.பிரபாகரன் ஆகியோர் போட்டியிடுகிறார்கள்.
கவுன்சில் உறுப்பினர்கள் பதவிக்கு
வி கே கே இராஜசேகரன் அணியில்
டாக்டர் செல்வராஜூ,
டாக்டர் இராஜசேகரன்,
டத்தோ கணேஷ்,
பிரவின் டத்தோ தமிழ்ச்செல்வம்,
குட்டி கிருஷ்ணன் மாதவன்,
டோனி கிளிபெர்ட்,
ஷாமில்,
டாக்டர் நெடுஞ்செழியன் வேங்கு ஆகியோர் போட்டியிடுகின்றனர்.
அதேசமயம்
பிரபாகரன் அணி சார்பில்
துணை தலைவர் பதவிக்கு மோகனா சின்னத்தம்பி,
உதவித் தலைவர் பதவிக்கு கவிமாறன் மற்றும்
பொருளாளர் பதவிக்கு
சண்முக செல்வி ஆகியோர் போட்டியிடுகின்றனர்.
கவுன்சில் உறுப்பினர்கள் பதவிக்கு இரா பெருமாள்,
ராம்குமார்
ஜெயா மாணிக்கம்,
சந்திரா ,
வினோதன்,
குளோரி,
வர்மன்,
பிரபாகரன் தபெ கோவிந்தன்,
பாவல்,
டத்தோ சந்திரசேகரன்,
குமரகுரு,
டாக்டர் புவனேஸ், ராம் பிரகாஷ் மற்றும்
ராஜேந்திரன் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.
இம்முறை 422 உறுப்பினர்கள் வாக்களிக்கும் தகுதி பெற்றிருக்கிறார்கள்.
இரு அணிகளிலும் முக்கிய தலைவர்கள் இடம் பெற்றுள்ளதால் போட்டி கடுமையாக இருக்கிறது என்பதில் ஐயமில்லை.

