சிலாங்கூர் – கோலாலம்பூர் இந்திய வர்த்தக சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்கு VKK ராஜா – பிரபாகரன் போட்டி!

கோலாலம்பூர் ஜூன் 4-
நாட்டில் 98 ஆண்டுகள் வரலாறு கொண்ட சிலாங்கூர் – கோலாலம்பூர் இந்திய வர்த்தக சங்கத்தின் தலைவர் பதவிக்கு வி.கே.கே.இராஜசேகரன் மற்றும் பிரபாகரன் இடையே கடும் போட்டி நிலவுகிறது.

வரும் ஜூன் மாதம் 14 ஆம் தேதி தோட்ட மாளிகையில் சங்கத்தின் ஆண்டு கூட்டம் மற்றும் தேர்தல் நடைபெறுகிறது.

இம்முறை அனைத்து பதவிகளுக்கும் இராஜசேகரன் – பிரபாகரன் அணி இடையே பலப்பரீட்சை ஏற்பட்டுள்ளது.

வி.கே கே இராஜசேகரன் இதற்கு முன்னர் துணை தலைவராக பதவி வகித்தார்.

அதேசமயம் தற்போது நடப்பு துணை தலைவராக பிரபாகரன் இருக்கிறார்.

கடந்த தேர்தலில் இவர்கள் இருவரும் ஒரே அணியில் இடம் பெற்றனர். ஆனால்
இம்முறை தலைவர் பதவிக்கு இருவரும் போட்டியிடுவதால் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும் இவர்கள் இருவரும் அரசியல் அரங்கில் புகழ்பெற்றவர்கள்.

இதனிடையே துணை தலைவர் பதவிக்கு நடப்பு உதவித் தலைவர் பன்னீர் செல்வம் மற்றும் நடப்பு செயலாளர் மோகனா சின்னத்தம்பி போட்டியிடுகிறார்கள்.

இருவரும் பிரபலமானவர்கள் என்பதால் பிரச்சாரம் சூடு பிடித்துள்ளது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles