ஜொகூர் – நெகிரி சட்டமன்றத் தேர்தலில் தேசிய முன்னணி வெற்றிக்கு சிலாங்கூர் பிபிபி கடுமையாக உழைக்கும்!

கோலாலம்பூர் ஜூன் 5-
ஜொகூர் மற்றும் நெகிரி செம்பிலான் மாநில சட்டமன்றம் கலைக்கப்பட்டுள்ளது.

இனி எந்த நேரத்திலும் தேர்தல் தேதியை மலேசிய தேர்தல் ஆணையம் அறிவிக்கலாம்.

ஜொகூர் மற்றும் நெகிரி செம்பிலான் மாநில சட்டமன்றத் தேர்தலில் தேசிய முன்னணி தனித்து போட்டியிடலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஒரு வேளை தனித்து போட்டியிட்டால் தேசிய முன்னணி வெற்றிக்கு சிலாங்கூர் மாநில பிபிபி கட்சியினர் கடுமையாக உழைப்பார்கள் என்று சிலாங்கூர் மாநில பிபிபி கட்சியின் தலைவர் டாக்டர் சுரேந்திரன் தெரிவித்தார்.

தேர்தல் வியூகம் குறித்து பிபிபி கட்சியின் தேசிய தலைவர் டத்தோ டாக்டர் லோகபாலா எடுக்கும் அனைத்து முடிவுகளையும் சிலாங்கூர் மாநில பிபிபி கட்சி ஏற்று அதற்கு ஏற்ப செயல்படும் என்று அவர் சொன்னார்.

இவ்விரு மாநிலங்களில் தேசிய முன்னணி வெற்றி மிகவும் அவசியமாகும்.

ஆகவே மனம் தளராமல் சிலாங்கூர் மாநில பிபிபி கட்சி கடுமையாக உழைக்கும் என்று அவர் கூறினார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles