

கிளாஸ்கோவ், ஆகஸ்ட் 3- மலேசியாவின் சைக்கிளோட்ட வீரர் டத்தோ அசிசுல் ஹஸ்னி அவாங் கிளாஸ்கோ காமன்வெல்த் போட்டியில் ஆண்களுக்கான Keirin இறுதிப் போட்டியில் தங்கத்தை வென்று வரலாற்று சாதனை படைத்துள்ளார்.
இந்த விறுவிறுப்பான இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவின் லீ ஹாஃப்மேன் வெள்ளியும், இங்கிலாந்தின் ஹேரி லெடிங்ஹாம்-ஹார்ன் வெண்கலப் பதக்கமும் வென்றனர்…
மற்றொரு மலேசியப் போட்டியாளரான முகமட் ஷா ஃபிர்தாஸ் சஹ்ரோம் ஏழாவது இடத்தைப் பிடித்தார்.
இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றி, காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் தங்கப் பதக்கம் வெல்ல வேண்டும் என்ற அசிசுல் ஹஸ்னி அவாங்கின் நீண்ட காலக் காத்திருப்பிற்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது.
இதற்கு முன் இரு முறை வெண்கலப் பதக்கம் மட்டுமே வென்றிருந்த இவர், 2010 புதுடெல்லி பதிப்பில் வெற்றி பெற்றபோதிலும் தொழில்நுட்பக் காரணங்களால் அவரது தங்கம் பறிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இந்த வரலாற்று வெற்றி, 2026 கிளாஸ்கோ காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் மலேசியப் பெற்ற 7ஆவது தங்கப் பதக்கமாகும்.
அதேவேளையில், உள்ளரங்கு மிதிவண்டிப் போடியில் வெல்லும் முதல் தங்கப் பதக்கம் இது என்பதும் குறிப்பிடத்தக்கது.

