மலாய் வாக்காளர்களை அம்னோ தலைவர்கள் சந்திக்காதது ம இகா தோல்விக்கு காரணம்!

ரவாங், ஆக 3-
நெகிரியில் மஇகா இரு தொகுதிகளில் தோல்வி கண்டதற்கு மலாய் வாக்காளர்களை அம்னோ தலைவர்கள் சந்திக்காததும் முக்கிய காரணமாகும் என்று
மஇகா உதவித் தலைவர் டத்தோ முருகையா கூறினார்.

நெகிரி செம்பிலான் மாநிலத் தேர்தல் பெரும் பரபரப்புகளுக்கு மத்தியில் நடைபெற்று முடிந்தது.
இதில் தேசிய முன்னணி, தேசியக் கூட்டணி வெற்றி பெற்று புதிய அரசாங்கத்தை அமைத்துள்ளது.

தேசிய முன்னணி ஆட்சி அமைத்ததில் மகிழ்ச்சி என்றாலும் மஇகா போட்டியிட்ட இரு தொகுதிகளில் தோல்வி கண்டது.

மஇகா தேசியத் தலைவர் டான்ஸ்ரீ விக்னேஸ்வரன், துணைத் தலைவர் டத்தோஸ்ரீ சரவணன் தலைமையில் ஒட்டுமொத்த மஇகாவினரும் இத்தொகுதியில் இறங்கி கடுமையாக உழைத்தனர்.

கடைசி நாள் வரை மஇகாவின் சாதகமாக தான அனைத்தும் இருந்தது.

ஆனால் தேர்தல் நாளில் அதிகமான மலாய், இந்திய வாக்காளர்கள் வாக்களிக்க வெளியே வரவில்லை.

அதே வேளையில் தேசிய முன்னணியின் உறுப்பு கட்சிகள் போட்டியிட்ட தொகுதிகளில் மஇகா தலைவர்கள் இறங்கி வேலை செய்தனர்.

ஆனால் மஇகா போட்டியிட்ட தொகுதிகளுக்கு அக்கட்சியினர் வரவில்லை.

குறிப்பாக மலாய் வாக்காளர்களை அம்னோ தலைவர்கள் சந்திக்காததும் மஇகாவின் தோல்வில்கு முக்கிய காரணமாக உள்ளது என்று ரவாங் கிரின் பார்க் ம இகா கிளை ஏற்பாட்டில் நடைபெற்ற 80 ஆம் ஆண்டு நிறைவு விழாவில் கலந்து கொண்ட போது அவர் இதனைத் தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles