
நகோயா, செப் 27-
ஜப்பான் நகோயா நகரில் நடைபெற்று வரும் ஆசிய விளையாட்டு போட்டியில் மலேசியாவின் ஸ்குவாஷ் வீராங்கனை சிவசங்கரி தங்கம் வென்று சாதனை படைத்தார்.
இன்று நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் 11-4,11-4, 11-7 என்ற புள்ளி கணக்கில் இந்திய வீராங்கனை அனாஹட் சிங்கை வீழ்த்தி தங்கப் பதக்கம் வென்றார்.
நான்கு ஆண்டுகளுக்கு முன் ஆசிய போட்டியில் இவர் தங்கம் வென்றார். இம்முறையும் தங்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.
மேலும் அடுத்த ஒலிம்பிக் போட்டிக்கும் இவர் நேரடியாக தகுதி பெற்றார்.

