தமிழர்களின் பாரம்பரிய – தமிழிசை வளர்ச்சிக்கு மலேசிய இந்தியர்கள் பாடுபடவேண்டும்! தமிழிசை மாநாட்டில் மனித வள அமைச்சர் சிவகுமார் முழக்கம்

பேராக் மாநிலத்தில் மிகவும் பிரபலமான ஈப்போ முத்தமிழ்ப் பாவலர் மன்றம் மற்றும் ஈப்போ வெற்றித் தமிழர் இயக்க ஏற்பாட்டில் இரண்டாம் உலகத் தமிழிசை மாநாடு 2023 ” ஈப்போவில் கடந்த வார இறுதியில் மிகவும் சிறப்புடன் நடைபெற்றது.

‘ தடம் பதித்த தமிழிசை” என்ற கருப் பொருளில் தொடங்கப்பட்ட இந்த மாநாடு ஈப்போ “ரிவர்பிராண்ட்” தங்கும் விடுதியில்
நடைபெற்றது.

மனிதவள அமைச்சும் பத்து காஜா நாடாளுமன்ற உறுப்பினருமான வ. சிவகுமார் சிறப்பு வருகை புரிந்து மாநாட்டை தொடக்கி வைத்தார்.

தொழில் முனைவர் கூட்டுறவு மேம்பாட்டு துறை துறை துணை அமைச்சர் சரஸ்வதி கந்தசாமியும் கலந்து சிறப்பித்தார்.

மலேசியாவில் இந்தியர்களின் கலை கலாச்சாரம், உட்பட தமிழர்களின் பாரம்பரிய தமிழசை வளர்ச்சிக்கும் பாடுபடவேண்டும் மனித வள அமைச்சர் சிவகுமார் கேட்டுக்கொண்டார்.

அந்த வகையில் ஈப்போ முத்தமிழ்ப் பாவலர் மன்ற முயற்சியால் இங்கு வெற்றிக்கரமாக இந்த நிகழ்வு நடைபெறுவதை அவர் பெரிதும் பாராட்டினார்.

இந்நாட்டில் தமிழர்கள் பாரம்பரியம் மற்றும் தமிழிசைகள் கட்டிக் காக்கப்பட வேண்டும் என்றார் அவர்.

ஈப்போ முத்தமிழ் பாவலர் மன்ற தலைவரும், ஏற்பாட்டுக் குழு தலைவருமான டாக்டர் அருள் ஆறுமுகம் கண்ணன் தமது உரையில் 11 தீர்மானங்களை முன் வைத்தார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles