
கோலாலம்பூர், அக் 4-
வரும் 16 ஆவது பொதுத் தேர்தலில் கூட்டரசு பிரதேச மாநிலத்தில் விலாயா ம இகாவுக்கு கண்டிப்பாக ஒரு நாடாளுமன்ற தொகுதி ஒதுக்கப்பட வேண்டும் என்று விலாயா மாநில ம இகா கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
கூட்டரசு பிரதேச மாநிலத்தில் ஒரு நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட ம இகா தயாராக இருக்கிறது.
அதே சமயம் விலாயா மாநில ம இகாவுக்கு ஒரு செனட்டர் பதவி வழங்கப்பட வேண்டும்.
மேலும் கோலாலம்பூர் மாநகர் மன்றத்தில் வாரிய உறுப்பினர் பதவியும் வழங்கப்பட வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

