பொய் பிரச்சாரங்கள் மஇகாவை சோதித்தாலும் மக்களுக்கான தனது கடமையில் இருந்து ம இகா பின்வாங்காது! டத்தோஸ்ரீ சரவணன் முழக்கம்

காளிதாஸ் சுப்ரமணியம்
மா.பவளச்செல்வன்

கோலாலம்பூர், அக் 5-
அரசியலில் நாம்தான் எல்லாம் என்ற நினைப்பில் இருந்தால் காணாமல் போய்விடுவோம் என்று மஇகா துணைத் தலைவர் டத்தோஸ்ரீ சரவணன் எச்சரித்தார்.

கூட்டரசுப் பிரதேச மஇகாவின் 80ஆம் ஆண்டு பேராளர் மாநாட்டை தேசியத் தலைவர் சார்பில் தொடக்கி வைத்ததில் மகிழ்ச்சி.

மஇகா எனும் பேரியக்கம் மக்களுக்காக தொடர்ந்து போராடுவோம்.

பல்வேறு சவால்கள், அவதூறுகள், எதிர்கட்சிகளின் பொய் பிரச்சாரங்கள் மஇகாவை சோதித்தாலும் மக்களுக்கான தனது கடமையில் இருந்து கட்சி ஒரு போதும் பின்வாங்கியது இல்லை என்று அவர் சொன்னார்.

தற்போது அரசியல் முழுமையாக சமூக ஊடக பிரச்சாரமாக மாறி விட்டது. இந்த சவாலை எதிர்கொள்ள மஇகா தயாராக வேண்டும்.

அதற்கு ஒவ்வொரு தொகுதி, கிளைகளிலும் ஒரு ஊடக அதிகாரியை உருவாக்க வேண்டும்.

கட்சியின் சாதனைகளை பேசுவதுடன் நமக்கு எதிரான பொய் பிரச்சாரங்களுக்கும் அவர் அதிரடியான பதிலை தர வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles