

மலேசிய தொழில் நிறுவனங்கள்
கம்போடியத் தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்தி கொள்வதற்கு ஏதுவாக மலேசிய – கம்போடியா இடையே இரண்டு புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.
இதன் வழி கம்போடியா தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்தலாம் என்று மனிதவள அமைச்சர் வ. சிவகுமார் தெரிவித்தார்.
பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தலைமையில் மலேசிய குழு குழு கம்போடியா பயணம் மேற்கொண்டது.
அலுவல் மற்றும் பணிப் பெண் ஆகிய தொழில் துறைகள் உட்படுத்தி இரு நாடுகள் இடையே ஒப்பந்தங்கள் கையெழுத்தானது.
இதன் முதல் ஒப்பந்தம் கடந்த 10 டிசம்பர் 2015ல் கையெழுத்தானது.
இந்த ஒப்பந்தம் கடந்த 9 டிசம்பர் 2020ல் நிறைவு பெற்றது.
அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கான புதிய ஒப்பந்தம் தற்போது கையெழுத்தாகி உள்ளது என்று சிவக்குமார் கூறினார்.
தற்போதைய நிலவரப்படி நாட்டில் தற்காலிக வேலைப் பெர்மிட் வாயிலாக 4,422 பேர் வேலை செய்கின்றனர்.
இதில் 923 பேர் பணிப் பெண்களாக வேலை செய்கின்றனர்.
அதே வேளையில் தற்போது இவ்விரு தொழில் துறைகளுக்கும் இந்தோனேசிய அல்லது பிலிப்பைன்ஸ் தொழிலாளர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படுகிறது.
இனி மலேசிய நிறுவனங்கள் கம்போடியத் தொழிலாளர்களுக்கும் வாய்ப்பு வழங்கலாம் என்று மனிதவள அமைச்சர் சிவக்குமார்.

