18 லட்சம் மலேசியர்கள்வெளிநாடுகளில் புலம் பெயர்ந்து விட்டனர் நாடாளுமன்ற எம்.பி.களுக்கு மனித வள அமைச்சர் சிவகுமார் விளக்கம்

புலம்பெயர்ந்தோருக்கான சர்வதேச அமைப்பின் உலக இடம்பெயர்வு அறிக்கை 2022 இன் அடிப்படையில் 18 லட்சம் மலேசியர்கள் வெளிநாடுகளுக்கு புலம் பெயர்ந்து விட்டனர் என்று மனித வள அமைச்சர் வ சிவகுமார் தெரிவித்தார் .

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு விளக்கம் அளிக்கும் சிறப்பு கூட்டம் நேற்று நாடாளுமன்ற கட்டத்தில் நடைபெற்றது.

அப்போது உரையாற்றிய மனித வள அமைச்சர் சிவகுமார் , சராசரி உலகளாவிய புலம்பெயர்ந்தோர் விகிதம் 3.6 விழுக்காடு மற்றும் ஒப்பிடுகையில், மலேசியாவின் இடம்பெயர்வு விகிதம் நாட்டின் மொத்த மக்கள் தொகையில் 5.6 விழுக்காடு அல்லது 18 லட்சத்து 60 ஆயிரம் ஆகும்.

இந்த எண்ணிக்கையில் 11 லட்சத்து 30,000 பேர் சிங்கப்பூரில் உள்ளனர் என்று அவர் விளக்கம் அளித்தார்.

இந்த கூட்டத்தில் பல நாடாளுமன்ற கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles