

மனித வள அமைச்சின் கீழ் இயங்கும் HRD Corp எனப்படும் தொழில் திறன் பயிற்சி திட்டங்கள் தொடர வேண்டும் என்று மனிதவள அமைச்சர் வ சிவகுமார் கேட்டுக் கொண்டுள்ளார்.
எச்ஆர்டி கோர்ப் செயல்பாடு திட்டங்கள் குறித்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு நேற்று விளக்கமளிக்கப்பட்டது.
2001 மனிதவள மேம்பாட்டு நிறுவன சட்டத்தின் கீழ் தகுதி வாய்ந்த முதலாளிகளிடம் இருந்து லெவி கட்டணத்தை எச்ஆர்டி கோர்ப் வசூலித்து வருகிறது.
தகுதியான நிறுவனங்களுக்கு இந்த கட்டணம் கட்டாயப்படுத்தப்படுகிறது.
இதன் வாயிலாக கிடைக்கும் நிதியை கொண்டு தொழில் திறன் பயிற்சிகள், மனித மூலதன மேம்பாடு ஆகிய திட்டங்களை எச்ஆர்டி கோர்ப் மேற்கொண்டு வருகிறது என்று அவர் சொன்னார்.
அரசாங்கத்தில் இலக்கை அடைய எச்ஆர்டி கோர்ப்பின் திட்டங்கள் பெரும் பங்களிப்பை வழங்குகிறது.
ஆகவே நாட்டில் எச்ஆர்டி கோர்ப் திட்டங்கள் தொடர வேண்டும் என்று அமைச்சர் சிவகுமார் கேட்டுக் கொண்டார்.
பாகான் நாடாளுமன்ற உறுப்பினர் லிம் குவான் எங், ஈப்போ பாராட் நாடாளுமன்ற உறுப்பினர் குலசேகரன், கிள்ளான் நாடாளுமன்ற உறுப்பினர் வீ. கணபதிராவ், ஜெலுத்தோங் நாடாளுமன்ற உறுப்பினர் ராயர் உட்பட பல எம்பிக்கள் இந்த கூட்டத்தில் கொண்டனர்.
நாடாளுமன்ற உறுப்பினர்களின் கேள்விகளுக்கு எச்ஆர்டி கோர்ப் தலைமை செயல் முறை அதிகாரி டத்தோ ஷாகுல் விரிவான முறையில் விளக்கமளித்தார்.

