மனித வள அமைச்சின்நோன்பு திறப்பு விழாவில்வசதி குறைந்த குழந்தைகளுக்கு அன்பளிப்புகள்

நோன்பு பெருநாளை முன்னிட்டு மனித வள அமைச்சின் சார்பில் நோன்புத் திறப்பு விழா மனித வள அமைச்சின் கட்டிடத்தில் மிகவும் விமரிசையாக நடைபெற்றது.

மனித வள அமைச்சில் பணியாற்றும் பணியாளர்களுடன் நோன்பு திறப்பு விழாவில் மனித வள அமைச்சர் வ சிவகுமார் கலந்து சிறப்பித்தார்.

துணை அமைச்சர் முஸ்தபா யூனுஸ் சக்முட், , மனித வள அமைச்சின் துணை தலைமை செயலாளர் ஏ.மணியம், எச்ஆர்டி கோர்ப் தலைமை செயல் முறை அதிகாரி டத்தோ சாகுல், சொக்சோ நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி டத்தோ அஸ்மான் உட்பட பலரும் இதில் கலந்து கொண்டனர்.

Pertubuhan kebajikan Islam peribadi mulia
Sg kantan, kajang இல்லத்தைச் சேர்ந்த குழந்தைகளுக்கு அன்பளிப்புகளை மனித வள அமைச்சர் சிவகுமார் எடுத்து வழங்கி உபசரித்தார்.

மனித வள அமைச்சர் சிவகுமார் தமது உரையில் இந்த நோன்பு பெருநாள் மலேசியர்கள் மத்தியில் சகோதரத்துவத்தை வளர்ப்பதாக குறிப்பிட்டார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles