பிரதமர் பதவி என்பது மிகவும் முக்கியமானது.
அந்த வகையில் பிரதமர் பதவியை வகிக்க யார் தகுதியானவர் என்பதை தீர்மானிப்பதில் மலேசியர்கள் கல்வி அறிவு பெற்றிருக்க வேண்டும் என கெஅடிலான் கட்சியின் தேசிய துணை செயலாளர் மற்றும் உலு சிலாங்கூர் கெஅடிலான் தொகுதி தலைவர் டாக்டர் சத்யா பிரகாஷ் நடராஜன் கேட்டுக் கொண்டுள்ளார்.
நாட்டை ஆள்வதில் பிரதமரின் பதவியே முக்கிய உறுதுணையாக உள்ளது.
மக்களின் நம்பிக்கை பெற்றவராகவும் உலக அரங்கில் மதிக்கப்படக் கூடியவராகவும் இருக்க வேண்டும்.
ஊழல் இல்லாத ஒரு அரசாங்கத்தை வழிநடத்தக்கூடிய அனைத்து திறமைகளும் இருக்க வேண்டும்.
அந்த வகையில் பிரதமர் பதவியை வகிக்க மிகவும் தகுதியானவர் யார் என்பதை தீர்மானிப்பதில் மலேசியர்கள் கல்வியறிவு பெற்றிருக்க வேண்டும் என்றார் அவர்.
கெஅடிலான் தேசிய தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இந்த பிரதமர் பதவிக்கு மிகவும் பொருத்தமானவர்.
உலக அரங்கில் ஒரு மாபெரும் போராளியாக இவர் விளங்கிக் கொண்டிருக்கிறார்.
அனைத்து இன மக்களையும் இன பேதம் இன்றி அரவணைக்கும் ஒரு ஒப்பற்ற தலைவராக டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் வலம் வந்து கொண்டிருக்கிறார்.
வரும் பொதுத் தேர்தலில் பக்கத்தான் ஹரப்பான் ஆட்சியை அமைக்க பொதுமக்கள் ஆதரவு தர வேண்டும்.
அதன் வழி ஒரு சிறந்த பிரதமர் நமக்கு கிடைப்பார்.
ஆகவே மலேசியர்கள் கல்வி அறிவோடு பிரதமரை தேர்வு செய்ய சிந்தித்து வாக்களிக்க வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார்.