தேசிய ரத்த வங்கியில் போதுமான ரத்தம் கையிருப்பில் இருப்பதை உறுதி செய்யும் வகையில் மலேசியா தெலுங்கு சங்கத்தின் ஏற்பாட்டில் பிரிக்பீல்ட்ஸ் நியூ செண்டரில் இரு தினங்களாக ரத்ததான முகாம் நடைபெற்றது.
சிலாங்கூர் – கோலாலம்பூர் மாநில தெலுங்கு சங்கத்தின் கிளைத் தலைவர் கிருஷ்ணா ஏ.கே.ராவ் தலைமையில் நடைபெற்ற இந்த ரத்ததான முகாமில் நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு ரத்ததானம் செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.