ஜசெக வின் முக்கிய தலைவர்களில் ஒருவரான சுங்கை பீலேக் சட்டமன்ற உறுப்பினர் ரோனி லியூ மிக விரைவில் ஜசெக வில் இருந்து விலகுகிறார்.
ஜசெக கட்சியில் இருந்து விலகுவது உறுதி. இது பற்றி மிக விரைவில் அறிவிப்பை வெளியிடுவேன் என்று அவர் சொன்னார்.
கடந்த 1980 ஆம் ஆண்டு ஜசெக வில் இணைந்த ரோனி லியூ அண்மையில் நடைபெற்ற ஜசெக பொதுப் பேரவையில் ஜசெக உச்சமன்ற தேர்தலில் வெற்றி பெற்றார்.
அணி தாவும் தவலைகள் கட்சியில் இருந்து நீக்கப்படும் வேளையில் அவர்கள் தங்களது நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று இரு வாரங்களுக்கு முன்னர் ஜசெக கட்சி சட்ட விதிகளில் திருத்தம் செய்யப்பட்டது.
இதற்கு ரோனி லியூ உடன் படவில்லை என்பதால் அவருக்கும் ஜசெக தலைமை செயலாளர் அந்தோணி லோக் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது.
கட்சியின் விதிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்று அந்தோணி லோக் கட்சி உறுப்பினர்களை கேட்டுக் கொண்டிருக்கிறார்.