தீபாவளி பண்டிகை முன்னிட்டு இறந்த தங்களது குடும்ப உறவினர்களுக்கு படையல் போடுவது இந்தியர்களின் பாரம்பரியமாகும்..
அந்த வகையில் கிள்ளான் சிம்பாங் லீமா இந்து மையத்தில் புதைக்கப்பட்டவர்களுக்கு அவர்களது குடும்ப உறுப்பினர்கள் படையல் போடுவதற்கு ஏதுவாக இன்று அந்த இடுகாடு சுத்தம் செய்யப்பட்டது.
சிலாங்கூர் இந்திய சமூக நலன் மரண சகாயம் இயக்கம், கிள்ளான் நகராண்மைக் கழக உறுப்பினர்கள் மற்றும் அரசு சார்பற்ற இயக்கங்கள் இன்று ஒன்றிணைந்து இடுகாட்டை சுத்தம் செய்தனர்.
வரும் அக்டோபர் 16ஆம் தேதி இந்த இடுகாட்டில் இந்து கல்லறை விழாவும் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.
சம்பந்தப்பட்ட குடும்ப உறுப்பினர்கள் கலந்து கொண்டு ஆதரவு தெரிவிக்கும் படி சிலாங்கூர் இந்திய சமூக நலன் மரண சகாயம் இயக்கத்தின் தலைவர் டத்தோஸ்ரீ தட்சிணாமூர்த்தி கேட்டுக் கொண்டுள்ளார்.