
நாட்டில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்திய ஷா ஆலம் சீ ஃபீல்ட் ஸ்ரீ மகா மாரியம்மன் அதே இடத்தில் சிலாங்கூர் மாநில அரசு நிலை நிறுத்தி விட்டது என்று சிலாங்கூர் மாநில மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி தெரிவித்தார்.
இந்த ஆலயத்தை இடம் மாற்ற செய்ய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டபோது நாட்டில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
பல போராட்டங்களுக்கு பின்னர் இன்று சீ ஃபீல்ட் ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயம் பிரச்சினைக்கு நல்ல தீர்வு பிறந்துள்ளது.
வரலாறு சிறப்பு வாய்ந்த இந்த ஆலயம் இப்போது இதே இடத்தில் நிலை நிறுத்தப்பட்டுள்ளது என்று அவர் சொன்னார்.
அதே கிள்ளான் லிட்டில் இந்தியாவில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பாடாங் செட்டி பெயரும் நிலை நிறுத்தி விட்டோம்.
பாடாங் செட்டி முன்பு திடலாக இருந்தது.
பின்னர் கிள்ளான் நகராண்மைக் கழகம் இந்த இடத்தை மேம்படுத்தி பாடாங் எம்.பி.கே என்று பெயர் மாற்றம் செய்ய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட போது கடுமையான எதிர்ப்புகள் கிளம்பியது.
சிலாங்கூர் மாநில அரசு இதில் தலையிட்டு இப்போது டத்தாரான் எம்பிகே பாடாங் செட்டி என்று பெயர் சூட்டப்பட்டிருப்பதாக அவர் சொன்னார்.
இந்திய சமுதாயத்தின் தேவைகளை அறிந்து சேவையாற்றி வரும் சிலாங்கூர் மாநில அரசு சீன ஃபீல்ட் ஸ்ரீ மகா மாரியம்மன் கோவில் மற்றும் பாடாங் செட்டியை நிலை நிறுத்தி விட்டது என்று அவர் பெரும் உற்சாகத்துடன் தெரிவித்தார்.

சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் வீ கணபதி ராவ் தலைமையில் இயங்கும் ஐ சீட் இயக்கத்தின் சார்பில் பாடாங் செட்டியில் நடைபெற்ற தீபாவளி சந்தையில் கலந்து கொண்டு உரையாற்றிய போது டத்தோஸ்ரீ அமிரூடின் சாரி இவ்வாறு தெரிவித்தார்.

