பரதன் கிண்ணக் கால்பந்து போட்டி! கால் இறுதி சுற்றுக்கு கோலாலம்பூர் குழு தகுதி

செர்டாங் மே 7
மலேசிய இந்தியர் விளையாட்டு பேரவை ஏற்பாட்டில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் பரதன் கிண்ணக் கால்பந்து போட்டியில் கோலாலம்பூர் குழு கால் இறுதி சுற்றுக்கு தகுதி பெற்றது.

இன்று செர்டாங் யூபிஎம் அரங்கில் நடைபெற்ற ஆட்டத்தில் கோலாலம்பூர் குழு 6-0 என்ற கோல் கணக்கில் பகாங்கை வீழ்த்தியது.

கடந்த வாரம் தொடக்க ஆட்டத்தில் கோலாலம்பூர் குழு 5+0 என்ற கோல் கணக்கில் புத்ரா ஜெயா குழுவை வீழ்த்தியது.

இரண்டு ஆட்டங்களில் வெற்றி பெற்று சி – பிரிவில் 6 புள்ளிகளை பெற்றிருக்கும் கோலாலம்பூர் குழு நேரடியாக கால் இறுதி சுற்றுக்கு தகுதி பெற்றது.

கோலாலம்பூர் குழு நிர்வாகியாக பத்துமலை, குணசேகரன், கென்னத் கண்ணா பொறுப்பேற்றுள்ள வேளையில் குழு பயிற்சியாளராக பாபு பொறுப்பேற்றுள்ளார்.

டத்தோஸ்ரீ ரவின் இம்முறை கோலாலம்பூர் குழுவின் Sponsor ஆக இருக்கிறார்.

இன்று நடைபெற்ற கோலாலம்பூர் – பகாங் இடையிலான ஆட்டத்தை மலேசிய இந்தியர் விளையாட்டு பேரவை செயலாளர் சந்தன ராஜூ, கோலாலம்பூர் இந்தியர் சங்கத்தின் தலைவர் கே.பழனிசாமி ஆகியோர் கண்டு ரசித்தனர்.

இதனிடையே பரதன் கிண்ணக் கால்பந்து போட்டி கால் இறுதி சுற்றுக்கு பேராக், சிலாங்கூர், பினாங்கு தேர்வு பெற்றுள்ளன.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles