
வரும் பொதுத் தேர்தலில் தேசிய முன்னணி மீண்டும் ஆட்சியை அமைக்க இந்தியர்கள் வாக்குகள் மிகவும் முக்கியமானது என்று அம்னோ தலைவர் டத்தோஸ்ரீ அகமட் ஜாஹிட் ஹமிடி தெரிவித்தார்.
தேசிய முன்னணி மீண்டும் ஆட்சிக்கு வர வேண்டுமானால் இந்தியர்கள் கண்டிப்பாக ஆதரவு தர வேண்டும்.
தேசிய முன்னணி ஆட்சியில் இந்நாட்டில் உள்ள அனைத்து தாய்மொழி பள்ளிகள் தொடர்ந்து பாதுகாக்கப்படும் என்று அவர் சொன்னார்.
இதனிடையே கடந்த பொதுத் தேர்தலில்
ம இகா 9 நாடாளுமன்றம் மற்றும் 18 சட்டமன்ற தொகுதிகளில் போட்டியிட்டது.
வரும் பொதுத் தேர்தலில் கூடுதல் தொகுதியில் போட்டியிட விரும்பினால் தேசிய முன்னணி தேர்தல் இயக்குனர் டத்தோஸ்ரீ முகமட் ஹசானுடன் பேச்சு வார்த்தை நடத்தி கூடுதல் தொகுதிகளை பெற்றுக் கொள்ளுங்கள்.
பருவமழை காலத்தில் தேர்தலை நடத்த நாங்கள் கோரிக்கை விடுக்கவில்லை.
வெள்ளம் ஏற்படுவதற்கு முன்னதாக பொதுத் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்று இன்று ம இகாவின் 76 ஆவது பொதுப் பேரவையை தொடக்கி வைத்த போது அவர் இதனை தெரிவித்தார்.

