
மலேசியா நாடாளுமன்றம் முறையாக கலைக்கப்படுவதாக பிரதமர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் இன்று மதியம் 3.00 மணிக்கு தொலைக்காட்சியில் உரையாற்றிய போது அறிவிப்பு செய்தார்.
பொதுத் தேர்தலுக்கு வழி விடும் வகையில் நாடாளுமன்றத்தை கலைப்பதற்கு மாட்சிமை தங்கிய மாமன்னர் இணக்கம் தெரிவித்துள்ளார்.
அந்த வகையில் நாடாளுமன்றம் கலைக்கப்படுகிறது.
புதிய அரசாங்கத்தை தேர்வு செய்யும் அதிகாரம் மக்களிடம் ஒப்படைக்கப்படுகிறது.
இன்றும் 60 தினங்களில் தேர்தல் நடத்தப்படும்.
குறிப்பாக வரும் டிசம்பர் 9ஆம் தேதிக்குள் தேர்தலை நடத்தும் அதிகாரம் தேர்தல் ஆணையத்துக்கு வழங்கப்படுகிறது என்றார்.

