

பேராக் மாநிலத்தில் இன்று ஏழு இந்தியர்கள் கிராமத் தலைவர்களாக நியமிக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
பேராவில் இந்தியர்கள் அதிகமாக வசிக்கக் கூடிய கிராமங்கள் அடையாளம் காணப்பட்டு பின்னர் அங்கு ஏழு இந்தியர்கள் கிராமத் தலைவராக இன்று நியமனம் செய்யப்பட்டனர் என்று பேராக் மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் வழக்கறிஞர் அ. சிவநேசன் தெரிவித்தார்.
பேராக் கம்போங் காமாட்சி கிராமத் தலைவராக அருள் பிரகாசம், , கம்போங் சுங்கை சுமன் கிராமத் தலைவராக ஞானசேகரன் , கம்போங் ஏன்றா கிராமத் தலைவராக முனியாண்டி,கம்போங் துன் சம்பந்தன் கிராமத் தலைவராக விரஜன் ராமசாமி, கம்போங் புண்டுட் கிராமத் தலைவராக கணேஷ்
கம்போங் சுன் லீ கிராமத் தலைவராக கோகுலகிருஷ்ணன், கம்போங் கிந்தாவெலி கிராமத் தலைவராக கோபிநாத் நியமனம் செய்யப்பட்டனர்.
கிராமத் தலைவர்களாக நியமனம் செய்யப்பட்டவர்களில் மூவர் ம.இ.காவைச் சேர்ந்தவர்கள் ஆவர்.
ஜ.செ.க மற்றும் கெஅடிலான் சார்பில் தலா இருவர் கிராமத் தலைவர்களாக பதவி ஏற்றுக் கொண்டனர்.
பேராக் மாநிலத்தில் தேசிய முன்னணி மற்றும் பக்கத்தான் ஹராப்பான் சார்பில் ஏழு இந்தியர்கள் ஒரே நேரத்தில் கிராமத் தலைவர்களாக பதவி ஏற்றுள்ளது ஒரு வரலாறாகும்.

