


புத்ரா ஜெயா மே 31-
விளையாட்டு போட்டிகள் மூலம் நாட்டின் ஒற்றுமை நிரூபிக்கப்பட்டுள்ளது என்று மனிதவள அமைச்சர் வ சிவகுமார் இன்று நடைபெற்ற விளையாட்டு அமைச்சரவை குழு கூட்டத்தில் வலியுறுத்தியுள்ளார்
துணை பிரதமர் டத்தோஸ்ரீ அகமட் ஜாஹிட் ஹமிடி தலைமையில் இன்று விளையாட்டு அமைச்சரவை குழு கூட்டம் நடைபெற்றது.
முக்கியமான இந்த சந்திப்பு கூட்டத்தில்
பல அமைச்சர்கள் மற்றும் உயர் பதவியில் உள்ள அரசு அதிகாரிகளும் கலந்து கொண்ட வேளையில் மனிதவள அமைச்சர் என்ற முறையில் தமது கருத்துக்களையும் முன் வைத்ததாக அவர் சொன்னார்.
விளையாட்டை ஒரு கருவியாகப் பார்க்க வேண்டும் என்பதை முதலில் வலியுறுத்த விரும்புகிறேன்.
நாட்டிற்கு ஒற்றுமை மிகவும் முக்கியமானது. அது விளையாட்டு மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது.
நாட்டில் ஒற்றுமையை வளர்ப்பதில்
பல்வேறு போட்டிகள் மூலம் இணக்கமான உறவை பெற்றுள்ளோம்.
நமது நாடு சுதந்திரம் அடைந்ததில் இருந்து விளையாட்டு மூலம் பிணைக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு மாணவரையும் விளையாட்டுத் துறையில் ஊக்கப்படுத்த வேண்டும்.
மேலும் அதிகமான மக்களை பங்கேற்கும் வகையில் விளையாட்டுகளை
தீவிரப்படுத்த வேண்டும்.
பல்வேறு இனங்களைச் சேர்ந்த இளைஞர்கள் தங்கள் முயற்சிகளை மேம்படுத்த விளையாட்டுகளை தேர்வு செய்கிறார்கள்.
அந்த வகையில்
மலேசியாவில் ஒற்றுமையை நோக்கி விளையாட்டுகளை உருவாக்குங்கள் என்று
அதிகாரிகளை கேட்டுக் கொள்கிறேன்.
நகரத்தில் மட்டுமல்ல , வெளி புறத்திலும் விளையாட்டு மூலம் மக்களை ஒன்றிணைக்கும் இலக்கை அடைய வசதிகள் ஏற்படுத்த வேண்டும்.
விளையாட்டின் மூலம் ஒற்றுமையைக் கட்டியெழுப்புவதற்கான அர்ப்பணிப்பு சீரானதாகவும் உள்ளடக்கியதாகவும் இருக்க வேண்டும்.
அரசு, கல்வி நிறுவனங்கள் மற்றும் பொதுமக்கள் என அனைத்து தரப்பினரையும் உள்ளடக்கிய
மலேசியாவில் ஒற்றுமையை வலுப்படுத்த விளையாட்டு ஒரு முக்கிய நிகழ்ச்சி நிரலாக இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

