

செலாயாங் ஜூன் 11-
மலேசிய இந்தியர் விளையாட்டு பேரவை ஏற்பாட்டில் நடைபெற்ற பரதன் கிண்ணக் கால்பந்து போட்டியில் நெகிரி செம்பிலான் குழு 1-0 என்ற கோல் கணக்கில் பினாங்கை வீழ்த்தி கிண்ணத்தை வாகை சூடியது.
நேற்றிரவு செலாயாங் அரங்கில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் நெகிரி செம்பிலான் குழுவை எதிர்த்து பினாங்கு மோதியது.
இறுதிவரை அனல் பறந்த இந்த ஆட்டத்தில் நெகிரி செம்பிலான் குழு 1-0 என்ற கோல் கணக்கில் வாகை சூடி 20,000 வெள்ளி ரொக்கப் தையும் பரதன் கிண்ணத்தையும் தட்டிச் சென்றது.
இரண்டாம் இடத்தைப் பிடித்த பினாங்கு குழுவுக்கு 10,000 வெள்ளி வழங்கப்பட்டது.
3ஆவது மற்றும் 4 ஆவது இடத்தை பிடித்த கோலாலம்பூர் மற்றும் சிலாங்கூர் குழுவுக்கு தலா 3,000 வெள்ளி வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
பேர் பிளே கிண்ணத்தை இம்முறை பினாங்கு வாகை சூடியது.
இறுதி போட்டியை காண சிறப்பு வருகை புரிந்த கூட்டுறவு மேம்பாட்டு துறை துணை அமைச்சர் சரஸ்வதி கந்தசாமி, மலேசிய இந்தியர் விளையாட்டு பேரவை தலைவர் டத்தோ சுப்ரா ரத்னவேலு மற்றும் இளம் தொழிலதிபர் டத்தோ கணேசன் கென்னி ஆகியோர் வெற்றி பெற்ற குழுக்களுக்கு பரிசுகளை எடுத்து வழங்கி பாராட்டினர்.
3,000க்கும் மேற்பட்ட ரசிகர்கள் செலாயாங் அரங்கை நோக்கி படையெடுத்து முழு ஆதரவை வழங்கினர்.

