



அண்மையில் வெளியான எஸ்.பி.எம். தேர்வில் திலிபன் த/பெ முத்தமிழ் மன்னன் அனைத்து பாடங்களில் தேர்ச்சி பெற்று 10ஏ பெற்றார்.
அதேபோல் தினேஷ் அர்வின் டாக்டர் மகேந்திரன் 9 ஏ பெற்றார்.
மை பெமிலி குடும்ப உறுப்பினர்கள் சார்பில் அதன் தலைவர் டாக்டர் பி.எஸ். பிள்ளை மற்றும் யாங் பெர்பஹியா டாக்டர் மனோ பரமசிவம் தலைமையில் பாராட்டு விழா நடைபெற்றது.
எஸ்பிஎம் தேர்வில் சிறப்பு தேர்ச்சி பெற்ற இரு மாணவர்களுக்கும் மாலைகள் அணிவித்து ரொக்க வெகுமதியும் வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் பிறந்த நாள் விழாவை கொண்டாடிய மைபிபிபி கட்சியின் தேசிய இளைஞர் பிரிவு தலைவர் சத்தியா சுதாகரன், பிரிக்பீல்ட்ஸ் கெஅடிலான் தலைவர் ரேமன், செராஸ் வட்டார அரசியல் பிரமுகர் ஷான் முத்துசாமி உட்பட சிறப்பு பிரமுகர்களாக கலந்து சிறப்பித்த மோகன்தாஸ், லெம்பா பந்தாய் கெஅடிலான் உதவித் தலைவர் எஸ். பக்தவச்சலம், ஸ்டார் மணியம் மற்றும் டாக்டர் மனோ பரமசிவம் ஆகியோருக்கும் சிறப்பு செய்யப்பட்டது.
சிலாங்கூர் கோலாலம்பூர் இந்தியர் வர்த்தக சங்கத்தின் ஆட்சிக் குழு உறுப்பினர் சுப்ரா, டத்தோ டாக்டர் ஜெகா, லெம்பா பந்தாய் கெஅடிலான் மகளிர் தலைவி ஷினா, டாக்டர் சுரேந்திரன், டாக்டர் யோகேஸ்வரன், கோவில் சந்திரன்,
TNB சந்திரன், மாலைமுனி ஆகியோரும் கலந்து சிறப்பித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது

