இந்தியர்கள் அதிகம் வாழும் இடங்களில் தமிழ்ப் பள்ளிகளை இடம் மாற்றம் செய்ய முயற்சிகள் மேற்கொள்ளப்படும்! மனிதவள அமைச்சர் சிவகுமார் அறிவிப்பு

பத்தாங் காலி ஜூன் 18-
குறைவான மாணவர்களை கொண்டிருக்கும் தமிழ்ப் பள்ளிகள் இந்தியர்கள் அதிகம் வாழும் இடங்களில் இடம்பெற்றம் செய்ய முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்று மனிதவள அமைச்சர் வ சிவகுமார் தெரிவித்தார்.

முன்பு தோட்டப் புறங்களில் இந்தியர்கள் அதிகம் வாழ்ந்தனர். இதனால் அதிகமான மாணவர்கள் தோட்டப்புற தமிழ்ப் பள்ளிகளில் படித்தார்கள்.

இப்போது இந்தியர்கள் நகர் புறங்களில் குடியேறி விட்டதால் தோட்டப்புற தமிழ்ப் பள்ளிகளில் மாணவர்கள் எண்ணிக்கை குறைந்து விட்டது.

15க்கும் குறைவான மாணவர்களை கொண்ட தமிழ்ப் பள்ளிகள் இருப்பதால் இந்த பள்ளிகளின் எதிர் காலம் கேள்விக்குறியாக உள்ளது.

இந்த பள்ளிகள் நகர்புறங்களில் இடமாற்றம் செய்வதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்படும்.

முதலில் நிலம் அடையாளம் காணப்பட வேண்டும். பின்னர் அதற்குரிய மானியம் ஒதுக்கப்பட வேண்டும்.

படிப்படியாக இந்த பள்ளிகள் இடம் மாற்றம் செய்வதற்கு கால அவகாசம் தேவை.

இதற்குரிய முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்று நேற்று பத்தாங் காலனியில் நடைபெற்ற கலாச்சார விழாவில் உரையாற்றிய போது மனிதவள அமைச்சர் சிவகுமார் இவ்வாறு தெரிவித்தார்.

தமிழ்ப் பள்ளிகளும் கோவில்களும் நமது இரு கண்களாகும். அதை நாம் தொடர்ந்து காக்க வேண்டும் என்றார் அவர்.

உலுசிலாங்கூர் மாவட்ட கவுன்சிலர் கலைச்செல்வன் மற்றும் புவனேஸ்வரன் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த கலாச்சார விழாவில் மனிதவள அமைச்சர் சிவகுமார் கலந்து சிறப்பித்தார் என்பது குறிப்பிடத்தக்கது

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles