


பத்தாங் காலி ஜூன் 18-
உலுசிலாங்கூர் தொகுதியில் உள்ள நைகல் கார்டன் மற்றும் புக்கிட் தாகார் தோட்டப் பாட்டாளி பிள்ளைகள் பள்ளிக்கு சென்று வர புதிய வேன் வாங்குவதற்கு மனிதவள அமைச்சர் வ.சிவகுமார் 50,000 வெள்ளி மானியம் வழங்க முன் வந்துள்ளார்.
நைகல் கார்டன் தோட்டத்தைச் சேர்ந்த 21 மாணவர்கள் மற்றும் புக்கிட் தாகார் தோட்டத்தைச் சேர்ந்த 16 மாணவர்கள் ஆரம்ப – இடைநிலை பள்ளிகளில் பயில்கின்றனர்.
தோட்டத்து செம்மண் சாலையில் இந்த மாணவர்களை பள்ளிக்கு ஏற்றி செல்வதற்கு பொது போக்குவரத்து சேவைகள் இல்லை.
உலுசிலாங்கூர் மாவட்ட கவுன்சிலர் கலைச்செல்வன் மற்றும் புவனேஸ்வரன் முயற்சியில் இப்போது 1 லட்சத்து 50 ஆயிரம் வெள்ளியில் தோட்டப் பாட்டாளி பிள்ளைகளுக்காக புதிய வேன் வாங்குவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
சுற்று வட்டாரத்தில் உள்ள பல நல்லுங்கள் புதிய வேன் வாங்குவதற்கு உதவ முன் வந்துள்ளன.
இந்நிலையில் நைகல் கார்டன் மற்றும் புக்கிட் தாகார் தோட்டப் பாட்டாளிகளின் பிள்ளைகள் இலவசமாக பள்ளிக்கு ஏற்றி சென்று வர வாங்கப்படும் புதிய வேனுக்கு 50, ஆயிரம் வெள்ளியை வழங்குவதாக மனிதவள அமைச்சர் வ சிவகுமார் அறிவித்தார்.
நேற்றிரவு பத்தாங் காலி யில் நடைபெற்ற கலாச்சார விழாவில் கலந்து கொண்ட மனிதவள அமைச்சர் சிவகுமார் 500 பேர் மத்தியில் இந்த அறிவிப்பை செய்தபோது தோட்டப் பாட்டாளிகளின் பிள்ளைகள் உற்சாகமாக கைத்தட்டி தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
இன்னும் இரண்டு மாதங்களில் புதிய வேன் வாங்கப்பட்ட வேண்டும்.
இந்த வேனில் நைகல் கார்டன் மற்றும் புக்கிட் தாகார் தோட்டப் பாட்டாளிகளின் பிள்ளைகள் உற்சாகமாக பள்ளிக்கு சென்று வர வேண்டும் என்று மனிதவள அமைச்சர் சிவகுமார் கேட்டுக் கொண்டார்.
பத்தாங் காலி சட்டமன்ற ஒருங்கிணைப்பாளர் துவான் சைபுடின், டமான்சாரா நாடாளுமன்ற உறுப்பினர் கோபிந்த் சிங் சிறப்பு அதிகாரி மண்டிப் சிங் உட்பட 500க்கும் மேற்பட்ட மக்கள் இந்த நிகழ்வில் கலந்து சிறப்பித்தனர்.
உலுசிலாங்கூர் மாவட்ட கவுன்சிலர் கலைச்செல்வன் மற்றும் புவனேஸ்வரன் முயற்சியில் இந்த விழா மிகவும் விமரிசையாக நடைபெற்ற வேளையில் கவிமாறன் அறிவிப்பில் கலாச்சார நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது.

