செந்தூல் காளியம்மன் கோவில் திருவிழாவில் மனிதவள அமைச்சர் சிவகுமார் கலந்து சிறப்பித்தார்

கோலாலம்பூர் , ஜூன் 19-
நாட்டில் புகழ்பெற்ற திருத்தலங்களில் ஒன்றாக செந்தூல் காளியம்மன் கோவில் விளங்கி கொண்டிருக்கிறது.

ஒவ்வொரு ஆண்டும் செந்தூல் காளியம்மன் கோவில் திருவிழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு காணிக்கை செலுத்துவார்கள்.

கோவிட் 19 தாக்கத்தினால் இரண்டு ஆண்டுகள் தடைபட்டு போன செந்தூல் காளியம்மன் கோவில் திருவிழா நேற்று மிகவும் விமரிசையாக நடைபெற்றது.

இரு தினங்களாக பக்தர்கள் பெரும் அளவில் திரண்டு காணிக்கை செலுத்தி காளியம்மனை தரிசனம் செய்தனர்.

மனிதவள அமைச்சர் வ. சிவகுமார், பத்து நாடாளுமன்ற உறுப்பினர் பி.பிரபாகரன், சமூக சேவையாளர் டத்தோ ஆர். சந்திரகுமணன் ஆகியோர் திருவிழாவில் கலந்து சிறப்பித்தனர்.

ஆலய நிர்வாகத்தின் சார்பில் இவர்களுக்கு சிறப்பு செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles