அம்பாங் அல்லது கோம்பாக் தொகுதியில்
டத்தோஸ்ரீ அன்வார் போட்டியிடலாம்

நம்பிக்கைத் துரோகிகளுக்கு பாடம் புகட்ட கெஅடிலான் தேசிய தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அம்பாங் அல்லது கோம்பாக் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

2018 இல் நடைபெற்ற பொதுத் தேர்தலில் பக்கத்தான் ஹரப்பான் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற பின்னர் அஸ்மின் அலி மற்றும் ஜூரைடா கமாரூடின் உட்பட பத்து எம்பிக்கள் அணி தாவினார்.

இதனால் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பக்கத்தான் ஹரப்பான் அரசு 22 மாதங்களில் கவிழ்தது.

நம்பிக்கை துரோகிகள் வசம் உள்ள கோம்பாங் மற்றும் அம்பாங் நாடாளுமன்ற தொகுதியில் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் போட்டியிடும் வாய்ப்பு மிக பிரகாசமாக இருக்கிறது என்று சிலாங்கூர் மாநில மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி தெரிவித்தார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles