

புத்ரா ஜெயா ஜூன் 29-
மலேசியாவுக்கு குறுகிய கால வருகையை மேற்கொண்டிருக்கும் தமிழ் நாட்டைச் சேர்ந்த பிரபல தொழிலதிபர் வி.ஜி.பி. சந்தோஷம் நேற்று மரியாதை நிமித்தமாக மனிதவள அமைச்சர் வ. சிவகுமாரை சந்தித்து உரையாடினார்.
உலகம் முழுவதும் திருவள்ளுவர் சிலையை அமைப்பதில் தீவிரம் காட்டி வரும் தொழிலதிபர் வி.ஜி.பி. சந்தோஷம் இதுவரை மலேசியாவில் நான்கு இடங்களில் திருவள்ளுவர் சிலையை அமைப்பதற்கு திருவள்ளூர் சிலையை அன்பளிப்பு செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
மனிதவள அமைச்சர் சிவகுமாருடன் நடத்தப்பட்ட சந்திப்பு பெரும் மகிழ்ச்சியை அளிக்கிறது என்று அவர் சொன்னார்.
மதிமுக எனப்படும் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் துணை பொதுச் செயலாளர் மல்லை சத்யாவும் இந்த சந்திப்பில் கலந்து சிறப்பித்தார்.

