
புத்ரா ஜெயா ஜூன் 29-
புனித ஹஜ் பெருநாள் தினத்தில் ஒற்றுமையுடனும் தியாகத்துடனும் பெருநாளை கொண்டாடும் அனைத்து முஸ்லிம் பெருமக்களுக்கும் ஹஜ் பெருநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதாக மனிதவள அமைச்சர் வ சிவகுமார் தமது வாழ்த்து செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டில் ஏற்படுத்தப்பட்டுள்ள இன்றைய நல்லாட்சியில் அனைத்து இனங்களும் ஒற்றுமையுடன் வாழ வேண்டும்.
தியாகம் தனி மனிதனோடு இணைத்திருக்கக்கூடிய நற்பண்பாகும்.
அந்த வகையில் இந்த புனித பெருநாளில் நம் அனைவரும் சகோதரத்துவத்தை பேணி காப்போம் என்று அவர் தமது வாழ்த்துச் செய்தியில் கேட்டுக் கொண்டுள்ளார்.

